26 ஆயிரம் புள்ளிகளைத் தொட்டது மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண்

திங்கள், 7 ஜூலை 2014 (13:09 IST)
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண், வரலாறு காணாத வகையில் 26 ஆயிரம் புள்ளிகளைத் தொட்டது.

பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலையில் இந்திய பங்குச் சந்தைகள் ஜூலை 7 அன்று காலை வர்த்தகத்தின் துவக்கத்திலேயே  புதிய உச்சத்தைத் தொட்டன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 100 புள்ளிகள் உயர்ந்து முதன் முறையாக 26 ஆயிரம் புள்ளிகளை தொட்டது. காலை நிலவரப்படி, வர்த்தகத்தின் இடையே 26,113 வரை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

தேசிய பங்குச் சந்தை நிப்டி 30 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 7789 என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 

இன்றைய வர்த்தக நேர நிறைவின்போது, சென்செக்ஸ் 138 புள்ளிகள் உயர்ந்து 26,100 என்ற நிலையிலும், நிப்டி 35 புள்ளிகள் உயர்ந்து 7,787 என்ற நிலையிலும் இருந்தன.

டி.சி.எஸ்., இன்போசிஸ் உள்ளிட்ட ஐ.டி. துறைப் பங்குகளும் சன் பார்மா, டாக்டர் ரெட்டி  உள்ளிட்ட மருந்துத் துறைப் பங்குகளும் டாட்டா பவர் பங்குகளும் (Sun Pharma, TCS, Tata Power, Infosys, Dr Reddy's Labs) மதிப்பு உயர்ந்தன. அதே நேரம், எச்.டி.எப்.சி., ஆக்சிஸ் உள்ளிட்ட வங்கிகளும், ஓ.என்.ஜி.சி., கெய்ல், ரிலையன்ஸ் (HDFC Bank, ONGC, GAIL, Axis Bank, Reliance) உள்ளிட்ட நிறுவனங்களும் பங்கு விலைச் சரிவைச் சந்தித்தன. 

பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பில் கடந்த வாரத்தில் மட்டும் இந்திய பங்குச் சந்தைகள் 3 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்