பிறந்த குழந்தையின் கால்களை உடைத்த மருத்துவ ஊழியர் (வீடியோ)
செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (14:58 IST)
பிறந்து மூன்றே நாட்களான குழந்தையின் கால்களை, மருத்துவ உதவியாளர் ஒருவர் உடைந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில், பிறந்து மூன்றே நாட்களான குழந்தையின் கால்களை உடைத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது மருத்துவமனை சிசிடிவியில் பதிவாகி தற்போது வெளியாகியுள்ளது.
மருத்துவர்கள் குழந்தையை சோதனை செய்ததில் காலில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையறிந்த குழந்தையின் தந்தை காவல்துறையில் புகார் அளித்தார். காவல்துறையினர் மருத்துவமனை சிசிடிவி கேமிராவை வைத்து குற்றவாளியை கண்டறிந்தனர்.
குழந்தை பிறந்து பின் சுவாச பிரச்சனை ஏற்பட்டதால், குழந்தை தனியறையில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்துள்ளது. அப்போதுதான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. காவல்துறையினர் கைது செய்த ஊழியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.