மாணவியை பலாத்காரம் செய்த பிரபல இயக்குனருக்கு 7 ஆண்டுகள் சிறை!

வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (08:43 IST)
பாலிவுட் இயக்குனர் மஹ்மூத் பரூகி கடந்த 2015-ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி அமெரிக்காவில் இருந்து படம் இயக்குவது எப்படி என ஆராய வந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.


 
 
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த அமெரிக்க மாணவி மஹ்மூத் பரூகி மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடந்து வந்தது.


 
 
இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம் அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இயக்குனர் மஹ்மூத் பரூகிக்கு 7 ஆண்டுகள் சிறை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. அபராத தொகையை அவர் செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாதங்கள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்