தெலுங்கு நடிகர் நகர்ஜுனாவுக்கு தெலங்கானாவில் மகபூப்நகர் மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிகுடா கிராமத்தில் 50 ஏக்கர் நிலப்பிரப்பில் பண்ணை வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டில் இருந்து ஒரு பகுதியில் துர்நாற்றம் விசியதால், பண்ணை வீட்டு காவலுக்கு இருந்த ஆட்கல் நாகர்ஜுனாவுக்கு தகவல் கொடுத்தனர்.
அவர் உடனடியாக போலீஸுக்கு தகவல் கொடுக்க, போலீஸ் தரப்பினர் சோதனை மேற்கொண்ட போது பழைய ரூம் ஒன்றில் எலும்புக்கூடு இருந்ததை கண்டுபிடித்தனர். அதை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையையும் மேற்கொண்டு வந்தனர்.
அப்போது பாண்டு கடந்த 2016 ஆம் ஆண்டு வீட்டை விட்டு சென்றுவிட்டதகாவும், அதன் பின்னர் அவருக்கு என்ன ஆனது என தெரியாது எனவும் ஆனால் அவர் தற்கொலை செய்துக்கொண்டார் என அவரது பெற்றோர்கள் கூறியதாகவும் தெரிவித்தனர்.