வெங்காயத்தில் இருந்து கருப்பு பூஞ்சை நோய் பரவுகிறதா?

வெள்ளி, 28 மே 2021 (14:43 IST)
வெங்காயத்தில் இருந்து கருப்பு பூஞ்சை நோய் பரவுவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது குறித்து மருத்துவர்கள் விளக்கம். 

 
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் மறுபுறம் கரும்பூஞ்சை தொற்றால் பலர் பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் கரும்பூஞ்சை தொற்று அதிகரித்துள்ளது. இந்நிலையில் வெங்காயத்தில் இருந்து கருப்பு பூஞ்சை நோய் பரவுவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது. 
 
இதை மறுத்துள்ள மருத்துவ நிபுணர்கள், இந்த செய்தி போலியானது. இதனை யாரும் நம்ப வேண்டாம். வெங்காயத்தின் மேல் காணப்படும் பூஞ்சைகள் பூமியின் கீழ் உள்ள பூஞ்சைகள் என்றும் கருப்பு பூஞ்சையை உருவாக்கும் வைரஸ்கள் வேறானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்