ஜவஹர்லால் நேரு பலகலைக்கழக விவகாரத்தில் ராஜஸ்தான் பாஜக எம்.எல்.ஏ ஞான்தேவ் அகுஜா, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் பாலியல் குற்றங்களின் மையமாக செயல்படுவதாகவும் ஆயிரக்கணக்கான மதுபாட்டில்கள், ஆணுறைகள் நாள்தோறும் தூக்கி வீசப்படுவதாக கூறி ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் அவர் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தற்போது, நேரு, காந்தி குடும்பத்தினரின் சிலைகளை தகர்த்து கீழே வீசினால் மக்கள் அதன் மீது காரி துப்புவார்கள் என கூறியுள்ளார்.