அவையில் தூங்கிய பாஜக தலைவர் ... செம வைரலாகும் போட்டோ

செவ்வாய், 25 ஜூன் 2019 (14:04 IST)
இந்தியாவில் சமீபத்தில் மக்களவைத் தேர்தல் முடிந்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் மக்களின் பிரதிநிதிகளாக தற்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது ஒரு போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. அதில் மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் சலையில் பேசிக்கொண்டிருக்கும் போது பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவினுடைய கண்கள் தூங்கி வழிவது போன்ற காட்சி வெளியாகி பரப்பரனது. இந்நிலையில் கடந்த 9 ஜனவரி 2019  குளிர்காலக் கூட்டத் தொடரின் போது, இது நடந்ததாகவும் அப்போது அங்குள்ள கேமராவில் பதிவான காட்சியில் அமித் ஷா கண்ணை மூடிய போது இக்காட்சி எடுக்கப்பட்டது   என்று கூறி பாஜகவினர் சமாளித்துவருகின்றனர்.
 
 
இப்படியிருக்க, கடந்த ஜூன் 20 ஆம் தேதி சபையில், குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் உரையாற்றும்  போது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது செல்போனை பயன்படுத்திக்கொண்டிருந்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. அது சம்பந்தமான போட்டோக்கள் வைரலானது.
 
இதற்கு ராகுலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர் ஏன் அமித் ஷா, அவையில் தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு எதுவும் கூறவில்லை எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
இந்நிலையில் தற்போது சபையில் அமைச்சர் முக்கிய உரையாற்றும் போது, பாஜக தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா தூங்குவது போன்று சித்தரித்து இந்த போட்டோ வைரல் ஆகி வருகிறது. இதற்கு பலரும் விமரசங்களும், லைக்குகளும் பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்