ராமர் பெயரில் பூஜை நடத்த தடை.. உச்சநீதிமன்றத்தில் பாஜக அவசர மனு..!

Mahendran

திங்கள், 22 ஜனவரி 2024 (10:11 IST)
தமிழகத்தில் உள்ள கோவில்களில் ராமர் பெயரில் பூஜை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக  பாஜக மாநில செயலாளர் வினோத் செல்வம்  உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை இன்றே விசாரிக்க வேண்டும் என முறையீடு செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
தமிழக கோவில்களில் ராமர் பெயரில் பூஜை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பாஜக குற்றம் சாட்டி உள்ளது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களே இது குறித்து தனது சமூக வலைதளத்தில் தெரிவித்து இருந்தார். ஆனால் ராமர் பெயரில் பூஜை நடத்த எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை என  தமிழக அரசு ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளது. 
 
இந்த நிலையில் தமிழக கோயில்களில் ராமர் பெயரில் பூஜை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநில செயலாளர் வினோத் செல்வம் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் இந்த மனுவை இன்றே அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் அவர் முறையீடு செய்து உள்ளார். 
 
இந்த மனு அவசர வழக்காக இன்றே விசாரிக்கப்படுமா அல்லது காலதாமதமாக விசாரிக்கப்படுமா அல்லது தள்ளுபடி செய்யப்படுமா என்பது குறித்து இன்னும் சில நிமிடங்களில் தெரியவரும்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்