அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் எப்போது? என்னென்ன சிறப்பு பூஜைகள்?

Siva

திங்கள், 22 ஜனவரி 2024 (07:27 IST)
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் இன்னும் சிலமணி நேரத்தில் நடைபெறவுள்ள நிலையில் தற்போது நடைபெற்று வரும் பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் காட்சி நேரலையில் ஒளிபரப்பாகி வருகிறது

பூஜைகள் முடிந்தபின்னர் ராமர் சிலை பிரதிஷ்டை அபிஜித் முகூர்த்த நேரமான 12.05 மணி முதல் 12.55 மணி வரையில் நடைபெறும்.  குறிப்பாக மிகவும் நல்ல நேரமான 12 மணி 29 நிமிடங்கள் முதல் 12 மணி 30 நிமிடங்களில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும். அப்போது அப்போது ஹெலிகாப்டர்கள் மூலம் கோயிலில் மலர்கள் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ALSO READ: பிரமாண்டமான அரங்கம்: உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த திமுக இளைஞரணி மாநாடு..!

மேலும் இன்று பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரை பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் உரையாற்ற உள்ளனர்

ராமர் கோவில் பிரதிஷ்டை முடிந்ததும் பிரதமர் மோடி 3.30 மணிக்கு அயோத்தியில் இருந்து புறப்படுவார் என கூறப்படுகிறது. ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி அயோத்தி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்