ஹிமாச்சலப்பிரதேச மக்களைப் பிரிக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது: வீபத்ரசிங் குற்றச்சாட்டு

ஞாயிறு, 4 அக்டோபர் 2015 (10:18 IST)
ஹிமாச்சலப்பிரதேச மக்களை பிரிக்க பாரதிய ஜனதா கட்சி முயற்சிப்பதாக அம்மாநில முதல் அமைச்சர் வீரபத்ர சிங் குற்றஞ்சாட்டி உள்ளார்.


 
 
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாக கூறி முதல் அமைச்சர் வீரபத்ர சிங்குக்கு சொந்தமான வீடுகளில் சி.பி.ஐ. அதிரடி சோதனை மேற்கொண்டது. மேலும் அவர் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
 
மின் நிறுவனம் ஒன்றின் உரிமத்தை பத்துமாதங்கள் நீட்டித்ததற்கு வீரபத்ரசிங்குக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாக பா.ஜ.க குற்றஞ்சாட்டியதை அடுத்து இந்த அதிரடி சோதனையில் சி.பி.ஐ. ஈடுபட்டிருந்தது.
 
இந்நிலையில்  சிம்லாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் பிரிவினைவாத அரசியலில் பா.ஜ.க. ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
 
இது குறித்து அவர் கூறுகையில், "பா.ஜ.க. ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வரும் போது என் மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்ய முயற்சிக்கிறது. ஆனால் அந்த வழக்கில் இருந்து நான் வெளியேறுகிறேன்". "ஹிமாச்சலப்பிரதேச மக்களை பிரித்து அதன் மூலம் என் அரசியல் வாழ்க்கையை அஸ்தமனமாக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது". இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்