பீகாரில் மாயமான இரும்பு பாலம்; விற்று தின்ற அதிகாரிகள்!

திங்கள், 11 ஏப்ரல் 2022 (11:26 IST)
வடிவேலு காமெடி ஒன்றில் கிணற்றை காணோம் என்பது போல பீகாரில் பாலமே காணாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் மக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட 60 அடி நீளமுள்ள இரும்பு பாலம் ஒன்று நடமாட்டமின்றி கிடந்துள்ளது. அந்த பாலம் பெரிதும் பயன்படாததால் அதுகுறித்து யாரும் கவலைப்படவில்லை. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அரசு அதிகாரிகள் சிலர் பாலத்தை கொஞ்சம் கொஞ்சமாக வெட்டியெடுத்து விற்றுள்ளனர்.

சமீபத்தில் பாலம் இருக்க வேண்டிய இடத்தில் பாலத்திற்கான எந்த சுவடுமே இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரும்பு பாலத்தை திருடிய புகாரில் வானிலைத் துறை அதிகாரி அரவிந்த் குமார் தலைமையில் வெல்டிங் கட்டர்கள் உள்ளிட்ட பலர் ஈடுபட்டது தெரிய வந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதில் மூளையாக செயல்பட்ட மாவட்ட துணை வட்ட அதிகாரி ராதே ஷியாம் சிங் உள்ளிட்ட அதிகாரிகள் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்