இமயமலைக்கு ஆபத்து - மிகப்பெரிய நிலநடுக்கத்திற்கு வாய்ப்பு என நிபுணர்கள் எச்சரிக்கை

புதன், 6 ஜனவரி 2016 (11:37 IST)
இமயமலை பகுதியில் 8.2 ரிக்டர் அளவிற்கு மேலான மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் இயற்கை பேரிடர் மேலாண்மை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
 

 
புவி அமைப்பின் அடிப்படையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக சமீப காலமாக இமயமலையை ஒட்டிய பகுதிகளில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இனி வரும் காலங்களில் இதை விட பயங்கர நிலநடுக்கம் இமயமலையில் ஏற்பட உள்ளது.
 
இந்த பயங்கர நிலநடுக்கத்தால் நேபாளம், பூட்டான், மியான்மர், இந்தியா ஆகிய நாடுகள் மிகப் பெரிய அழிவை சந்திக்க உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து ஏற்படும் இந்த நிலநடுக்கங்கள் இந்தியாவின் மலைப்பிரசே மாநிலங்கள், பீகார், உ.பி., டில்லி, வடகிழக்கு மாநிலங்கள் ஆகியன மிகப் பெரிய பாதிப்பை சந்திக்கும் என தேசிய பேரிடர் மேலாண் கழக இயக்குனர் சந்தோஷ் குமார் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அருணாச்சல பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 11 மலைப்பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்திய விஞ்ஞானிகளின் இந்த எச்சரிக்கையை சர்வதேச புவியியல் ஆய்வாளர்களும் உறுதி செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்