29-ந்தேதி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

புதன், 13 ஜூலை 2016 (13:23 IST)
நாடு முழுவதும் வரும் 29-ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்தனர். வங்கிகளை தனியார் மயமாக்கக் கூடாது, பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகளை இணைக்க கூடாது. வராக் கடனாக நிலுவையில் உள்ள ரூ.13 லட்சம் கோடியை உடனடியாக வசூலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 29-ந்தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் 9 சங்கங்களை சேர்ந்த 10 லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கிறார்கள் என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்