மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் மிசோரம் தவிர மீத 4 மாநிலங்களுக்கும் இன்று வாக்கு எண்ணும் பணி தொடங்கியுள்ளது. இதில் தெலுங்கானாவில் ஆளும் பி.ஆர்.எஸ் (39) கட்சியை ஒப்பிடுகையில் காங்கிரஸ் (70) முன்னிலையில் உள்ளது.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் பாஜக முன்னிலையில் உள்ளது. தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர் ராவ் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலுமே பின்னடைவை சந்தித்துள்ளார். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தான் போட்டியிட்ட சர்தார்புரா தொகுதியில் முன்னிலையில் உள்ள நிலையில், காங்கிரஸ் ஸ்டார் வேட்பாளரான சச்சின் பைலட் தான் போட்டியிட்ட டோங்க் தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார். சத்தீஸ்கர் முதல்வரான பூபேஷ் பாகல் தான் போட்டியிட்ட பதான் தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார்.