தண்டவாளத்தில் இறந்து கிடக்கும் தாய்: மார்பில் பால் குடிக்கும் பிஞ்சு குழந்தை (வீடியோ இணைப்பு)
வியாழன், 25 மே 2017 (13:57 IST)
மத்திய பிரதேசம் மாநிலம், தாமோ மாவட்டத்தில் உள்ள ரயில் நிலைய தண்டவாளத்தின் அருகில் பெண் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். தாய் இறந்ததை கூட அறியாத அந்த பெண்ணின் பிஞ்சு குழந்தை மார்பில் பால் குடித்த உருக்கமான சம்பவம் நடந்துள்ளது.
இன்று காலை தண்டவாளத்தின் அருகில் ஒரு பெண் இறந்து கிடந்ததை ரயில்வே போலீசார் பார்த்துள்ளனர். பெண்ணின் அருகே சென்ற போது அந்த பெண்ணின் குழந்தை பக்கவாட்டில் அவரது மார்பில் பால் குடித்ததை பார்த்துள்ளனர். இந்த காட்சியை பார்த்த ரயில்வே போலீசார் ஒரு நிமிடம் கண் கலங்கி போய்விட்டனர்.
இறந்து கிடந்த பெண்ணின் மூக்கு மற்றும் காதுகளில் இரத்தம் வந்துள்ளதால் அது விபத்தாக கூட இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நன்றி: சமயம்
குழந்தையை மீட்ட போலீசார் பத்திரமாக கவனித்து வருகின்றனர். மேலும் அந்த பெண்ணின் முகவரியை கண்டுபிடித்து தகவல் தெரிவித்து குழந்தையை ஒப்படைக்க முயற்சி செய்து வருகின்றனர்.