இன்றுமுதல் அமலுக்கு வரும் எஸ்பிஐயின் கெடுபிடி: அதிருப்தியில் வாடிக்கையாளர்கள்
புதன், 31 அக்டோபர் 2018 (09:28 IST)
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இனி ஏடிஎம்மில் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் தான் எடுக்க முடியும் என்று ஸ்டேட் பேங்க் வங்கி நிர்வாகம் அறிவித்திருந்த நடைமுறை இன்றுமுதல் அமலுக்கு வருகிறது.
இந்தியாவில் உள்ள பிரபல பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பல லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. இதுநாள் வரை இந்த வங்கியில் வாடிக்கையாளர்களாக உள்ளவர்கள் நாள் ஒன்றுக்கு 40000 ரூபாய் வரை பணம் எடுக்கும் நடைமுறை இருந்து வந்தது.
சமீபத்தில் வங்கி நிர்வாகம் பணம் எடுக்கும் வரம்பை 40 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரமாக குறைத்திருப்பதாகவும், இந்த நடைமுறை அக்டோபர் 31ல் இருந்து அமலுக்கு வரும் எனவும் அறிவித்திருந்தது.
அதன்படி 31 ஆம் தேதியான இன்று முதல் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஏடிஎம்மில் இருந்து நாள் ஒன்றிற்கு 20 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும். இதனால் பல வாடிக்கையாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.