’காலில் விழுந்தே ஆகனும்’ அரசு அதிகாரியை மிரட்டிய எம்.ஏல்.ஏ: வைரல் வீடியோ!!

சனி, 21 ஜனவரி 2017 (14:35 IST)
அசாம் மாநில பா.ஜ.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ அரசுப் பொறியாளரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 
 
அசாம் மாவட்டம் நாகோன் மாவட்டத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் எம்.எல்.ஏ திம்பேஸ்வர் தாஸ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவரது காரை அலுவலகத்தின் பாதை நடுவே நிறுத்தி வைத்தார். 
 
அதே வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உதவிப் பொறியாளராக உள்ளார் ஜெயந்தா தாஸ். இவர் நடுவில் நிறுத்தப்பட்டிருந்த எம்.எல்.ஏ.வின் காரை அங்கிருந்து அகற்றி ஓரமாக நிறுத்தியுள்ளார்.
 
இதை அறிந்த எம்.எல்.ஏ கொதிப்படைந்து, எனது காரை எப்படி நீ அகற்றலாம்? என தகராறு செய்து, தனது காலில் விழுந்து மன்னிப்பு கேட்க சொல்லி அரசு அதிகாரி ஜெயந்தா தாஸை மிரட்டினார். 
 
எம்.எல்.ஏ.வின் மிரட்டலால், ஜெயந்தா தாஸ் முதலில் தயங்கினாலும் வேறு வழியின்றி திம்பேஸ்வர் தாஸ் காலில் இரண்டு முறை விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
 
இந்த காட்சிகள் அந்த அலுவலகத்திலிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. இது உள்ளூர் தொலைக்காட்சிகளில் செய்தியாக வெளியாகி பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்