கானக்குயில் ஆஷா போஸ்லே காலமானார்!... ரசிகர்கள் இரங்கல்...

Mahendran

ஞாயிறு, 12 ஏப்ரல் 2026 (15:44 IST)
பாலிவுட்டில் பல பாடல்களை பாடி ரசிகர்களிடம் பிரபலமானவர் ஆஷா போஸ்லே. 1960 முதல் இவர் ஹிந்தியில் பாடல்களை பாடிவந்தார். 80,90களில் இவர் பாடிய பல பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது. இவருக்கு தற்போது 92 வயது. வயது முதிர்வு காரணமாக அவர் கடந்த சில வருடங்களாக பாடலை பாடவில்லை.

இந்நிலையில்தான், நேற்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து  தென் மும்பையில் உள்ள பிரீச்கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சுவாச பிரச்சனை இருந்ததால் செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரனமடைந்தார். அவரின் மறைவு செய்தியை அவரின் மகன் ஆனந்த் போஸ்லே உறுதி செய்திருக்கிறார்.    

தமிழில் ராமராஜன் படத்தில் வரும் செண்பகமே செண்பகமே, மீரா படத்தில் வரும் ஓ பட்டர்பிளை, சந்திரமுகி படத்தில் வரும் கொஞ்சநேரம் கொஞ்சநேரம், அலைபாயுதே படத்தில் வரும் செப்டம்பர் மாதம் உள்ளிட்ட சில படங்களை ஆஷா போஸ்லே பாடியிருக்கிறார். இவரின் மறைவையடுத்து பாலிவுட் மட்டுமின்றி தமிழ் சினிமா இசை ரசிகர்களும் இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.

ஆஷா போஸ்லேவின் இறுதிச்சடங்குகள் நாளை காலை 4 மணிக்கு மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்