தடுப்பூசி திட்டத்தை முன்பே தொடங்கியிருந்தால் மரணங்களை தடுத்து இருக்கலாம்... கெஜ்ரிவால்

வியாழன், 27 மே 2021 (10:20 IST)
2ஆவது அலை தொடங்கும் முன்பாக கடந்த டிசம்பரிலேயே தடுப்பூசி போட தொடங்கியிருந்தால் ஏராளமான உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும் என கெஜ்ரிவால் கருத்து. 

 
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக மாநில அரசுகள் தடுப்பூசிக்கான உலகளாவிய டெண்டரை அறிவித்தன. ஆனால் மத்திய அரசின் மூலம் மட்டுமே தடுப்பூசி வழங்க முடியும் என தடுப்பூசி நிறுவனங்கள் தெரிவித்ததாக கூறப்பட்டது.
 
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் “டெல்லியில் தடுப்பூசி பற்றாக்குறையை போக்க ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி நிறுவனம் தடுப்பூசிகள் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளது. எவ்வளவு தடுப்பூசிகள் என கூறப்படவில்லை என்று கூறியுள்ளார். 
 
மேலும், அனைத்து தரப்பு மக்களுக்கும் 2ஆவது அலை தொடங்கும் முன்பாக கடந்த டிசம்பரிலேயே தடுப்பூசி போட தொடங்கியிருந்தால் ஏராளமான உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும் என அவர் தெரிவித்தார். மேலும் வெளிநாடுகளுக்கு அதிகளவில் தடுப்பூசி ஏற்றுமதி செய்ததும் உள்நாட்டில் அதன் பற்றாக்குறைக்கு காரணமாகிவிட்டதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்