அவசர கூட்டம்: மத்திய அமைச்சர்களுக்கு அருண் ஜெட்லி அழைப்பு

புதன், 15 ஜூன் 2016 (12:50 IST)
ஒரு கிலோ தக்காளி ரூ.100-ஐ தொட்டதை அடுத்து வியாபாரிகள், உணவகம் நடத்துபவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருவதால் அதனை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக அவசர கூட்டத்திற்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அழைப்பு விடுத்தார்.


 
 
பணவீக்கம், காய்கறிகள், பருப்பு, எண்ணெய் போன்றவற்றின் அதிரடி விலை உயர்வு மற்றும் சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்களின் ஏற்றுமதி, இறக்குமதி வரிகள் குறித்து இன்று மதியம் தொடங்கிய இந்த கூட்டத்தில் பேசப்படும் என கூறப்படுகிறது.
 
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அழைப்பு விடுத்திருக்கும் இந்த கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் வெங்கைய்ய நாயுடு, நிதின் கட்காரி, ராம் விலாஸ் பஸ்வான், ராதா மோகன் சிங், நிர்மலா சீதாராமன் மற்றும் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்