நித்யானந்தாவைக் கைது செய்து ஆண்மைப் பரிசோதனை நடத்த, கர்நாடக நீதிமன்றம் உத்தரவு

திங்கள், 28 ஜூலை 2014 (16:52 IST)
நித்யானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது ஆணை பிறப்பித்து கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
நித்யானந்தா மீதான வழக்குகளை விசாரிக்க விதிக்கப்பட்டிருந்த தடையை கடந்த வாரம் கர்நாடக உச்சநீதிமன்றம் நீக்கியது. மேலும் அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்தவும் உத்தரவிட்டது. மேலும் அந்த உத்தரவில் ராம்நகர் நீதிமன்றத்தில் நித்தியானந்தா ஆஜர் ஆகி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் ராம்நகர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது நித்யானந்தா ஆஜராகவில்லை.

இதனையடுத்து நித்யானந்தாவிற்கு ஜாமீனில் வெளிவரமுடியாத கைது ஆணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த மாதம் 6 ஆம் தேதி அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்தி, 7 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
முன்னதாக, 2013 டிசம்பரில் நடிகை ரஞ்சிதா, நித்யானந்தாவிடம் தீட்சை பெற்று, சந்நியாசி ஆனார். அவர் பெயர், மா ஆனந்தமயி என மாற்றப்பட்டது. 
 
37 வயதாகும் நித்யானந்தா உருவாக்கிய அறக்கட்டளைக்குப் பல்லாயிரம் கோடி சொத்து உள்ளது. பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகும், தமது வழக்கமான ஆன்மீகப் பணிகளைக் கவனித்து வருகிறார். 
 
நான் ஆண் அல்ல. என்னால் எதுவும் நடைபெற்றிருக்க முடியாது. வேண்டுமானால் சோதித்துப் பார்த்துக்கொள்ளலாம் என 2010ஆம் ஆண்டு, நித்தியானந்தா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்