இந்த நிலையில் அர்னாப் கோஸ்வாமியின் ஜாமீன் மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டால் தங்களிடம் இது குறித்து விளக்கம் கேட்க வேண்டும் என மகாராஷ்டிர அரசு சார்பில் வழக்கறிஞர் சச்சின் பாட்டில் என்பவர் கேவியட் மனு தாக்கல் செய்து உள்ளார். தங்களுடைய கருத்தை கேட்காமல் இந்த ஜாமீன் மனுவில் எந்த விதமான உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது