காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவல் ? – ராணுவம் குவிப்பு !

வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (14:12 IST)
காஷ்மீரில் ஜெய்ஷ் முகமது அமைப்பை சேர்ந்த ஐந்து பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக வந்த தகவலை அடுத்து அங்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியில் இருந்து இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதிக்குள் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஐந்து பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக மத்திய அரசுக்குக் கிடைத்த தகவலை அடுத்து அங்கு ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். காஷ்மீரில் இருக்கும் பாதுகாப்புப் படையினர் முழு எச்சரிக்கையுடன் இருக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. காஷ்மீரின், நுழைவு மற்றும் வெளியேற்ற பாதைகளில் ஆயுதம் ஏந்திய துணை ராணுவப் படையினர் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர். 

இதுவரை அங்கு சுமார் 10,000 பாதுகாப்பு படையினர் காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதைவிட மும்மடங்குப் படை கொண்டுவரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் வகையில் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.விரைவில் சுதந்திரதினம் வர இருப்பதால் பயங்கரவாதிகள் ஏதேனும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்