மணிப்பூரில் ராணுவ அதிகாரியை கடத்திய போராட்டக்காரர்கள்.. தேடுதல் பணி தீவிரம்..!

Mahendran

வெள்ளி, 8 மார்ச் 2024 (18:03 IST)
மணிப்பூரில் ராணுவ அதிகாரி கடத்தப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவலை அடுத்து அவரை ராணுவ வீரர்கள் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் தேடி வருவதாக கூறப்படுகிறது. 
 
மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு வரும் நிலையில் அங்கு அமைதியை நிலை நாட்ட ராணுவம் களமிறக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை இராணுவ அதிகாரி ஒருவர் போராட்டக்காரர்களால் கடத்தப்பட்டதாகவும் இதுவரை கடத்தலுக்கான காரணம் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது 
 
இதற்கிடையே நடத்தப்பட்ட ராணுவ அதிகாரியை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் ராணுவம் மற்றும் காவல்துறை இணைந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது 
 
மேலும் தேசிய நெடுஞ்சாலை 102ல் செல்லும் அனைத்து வாகனங்களும் தீவிரமாக பரிசோதனை செய்யப்படுவதாகவும் தெரிகிறது. மணிப்பூரில் ராணுவ அதிகாரிகள் கடத்துவது இது முதல் முறையல்ல, ஏற்கனவே மூன்று முறையில் ராணுவ அதிகாரிகள் மணிப்பூரில் கடத்தப்பட்டு இருப்பதாகவும் இது நான்காவது முறை என்றும் கூறப்படுகிறது 
இந்த நிலையில் மணிப்பூரில்   தற்போது ஊரடங்கு உத்தரவுகள் தளர்த்தப்பட்டாலும் இன்னும் முழுமையாக அங்கு அமைதி திரும்ப வில்லை என்றும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்