சவாலை சந்திக்க மோடி தயாரா? - மாயாவதி

வெள்ளி, 25 நவம்பர் 2016 (10:51 IST)
ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தில் பொதுமக்களின் கருத்தை அறிய, நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு புதிய தேர்தலை சந்திக்க பிரதமர் மோடி தயாரா? என மாயாவதி சவால்விடுத்துள்ளார்.



 


இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தெரிவித்ததாவது: பிரதமர் மோடி, 'மொபைல் ஆப்' மூலம் நடத்திய கருத்து கணிப்பில், ஐந்து லட்சம் பேரில், 93 சதவீதம் பேர், ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறுகிறார். அவருக்கு தைரியம் இருந்தால், பார்லிமென்டை கலைத்து விட்டு, புதிதாக தேர்தலை நடத்த முன் வர வேண்டும் என்றார்.


 

வெப்துனியாவைப் படிக்கவும்