உங்களுக்கு மீம்ஸ் கிரியேட் பண்ண தெரியுமா? அப்போ நீங்க லட்சாதிபதிதான்!!

வியாழன், 30 மார்ச் 2017 (22:02 IST)
சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் பார்த்து இருப்பீர்கள். தற்கால சம்பவங்களுக்கு மிகப்பொருத்தமான பழைய புகைப்படம் ஒன்றையும் அதில் திருக்குறள் மாதிரி இரண்டே வரிகளில் ஒரு கமெண்டும் இருக்கும். பார்த்தவுடன் குபீர் சிரிப்பு வரவழைக்கும் இந்த மீம்ஸை கிரியேட் செய்ய ஒரு தனி திறமை வேண்டும்


 


ஏதோ மீம்ஸ் கிரியேட்டர்கள் சும்மா பொழுதுபோக்கிற்கு செய்கிறார்கள் என்று நினைத்து கொள்ள வேண்டாம். இவர்கள் ஐடி ஊழியர்களை விட மாதம் ஒன்றுக்கு லட்சக்கணக்கில் சம்பாதிக்கின்றார்களாம்

சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களுக்கு இருக்கும் வரவேற்பை பார்த்த ஒருசில நிறுவனங்கள் தங்களது விளம்பரங்களை மீம்ஸ் மூலமாக மக்களிடம் மற்றும் சமூக வலைதள பயனாளிகளிடம் கொண்டு செல்ல  விரும்புகின்றனர். இந்த நிறுவனங்கள் வித்தியாசமாக , நகைச்சுவை உணர்வுடன் சிந்திக்கும் மீம்ஸ் கிரியோட்டர்களை லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்து வேலைக்கு அமர்த்தி வைத்துள்ளன.

அதுமட்டுமின்றி அரசியல் கட்சிகளும் தங்களுக்கு எதிரான கட்சி மற்றும் தலைவர்களின் இமேஜை அடித்து நொறுக்க மீம்ஸ் கிரியேட்டர்களை நாடுகின்றனர். ஒரு மீம்ஸ்க்கு ரூ.5000 முதல் ரூ.25000 வரை தருவதற்கு அரசியல்வாதிகள் தயாராக இருக்கின்றார்களாம். உங்களுக்கு மீம்ஸ் கிரியேட் பண்ண தெரியுமா? அப்ப நீங்களும் இனிமேல் ஒரு லட்சாதிபதிதான்

வெப்துனியாவைப் படிக்கவும்