பேருந்துகளுக்கு டோட்டல் சேஞ்ச் ஓவர்: ஆந்திரா அதிரடி முயற்சி!

செவ்வாய், 12 மே 2020 (11:43 IST)
ஆந்திர பிரதேச மாநில போக்குவரத்துக் கழகம் சார்பிலும் போக்குவரத்து இயக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 
 
இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக விமானம், ரயில் மற்றும் பேருந்து போன்ற பொது போக்குவரத்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் பயணிகள் ரயில் சேவையை இந்திய ரயில்வே துவங்கியது. 
 
தமிழகத்திலும் ஊரடங்கிற்கு பின்னர் போக்குவரத்து துவங்கப்பட வேண்டும் என அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோல ஆந்திர பிரதேச மாநில போக்குவரத்துக் கழகம் சார்பிலும் போக்குவரத்து இயக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 
 
அந்த வகையில், முதற்கட்டமாக பேருந்துகளில் இருக்கக்கூடிய இருக்கைகளின் வடிவமைப்பை முற்றிலும் மாற்றி மூன்று வரிசைகள் கொண்ட இருக்கையாக மாற்றப்பட்டுள்ளது.  இதன் மூலம் பயணிகளுக்கு இடையே ஒரு மீட்டர் இடைவெளி இருக்கும். 
 
தொலைதூரப் பேருந்துகளுக்கு முதற்கட்டமாக இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆந்திராவில் சகஜ நிலை திரும்பியதும் இருக்கைகள் பழைய முறையைப் போல மாற்றப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்