டெல்லியில் கத்திமுனையில் பெண் கற்பழிப்பு: மீண்டும் ஒரு வாடகை கார் ஓட்டுநரின் வெறிச்செயல்

சனி, 11 ஏப்ரல் 2015 (14:13 IST)
டெல்லியில்  வாடகை கார் ஓட்டுநர் ஒருவர் கத்திமுனையில் ஒரு பெண்ணை காரில் வைத்து கதறக் கதற கற்பழித்துள்ளார்.

கடந்த 4 மாதங்களுக்கு முன்னர், உபேர் கால் டாக்சியில் பயணம் செய்த 27  வயது இளம் பெண்ணை கார் ஓட்டுநர் கற்பழித்தார். அவரது புகாரின் பேரில், உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் அந்த கார் ஓட்டுநர் சிவகுமார் யாதவ் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அந்த கால் டாக்சி நிறுவனத்தின் உரிமமும் ரத்து செய்யப்பட்டது.
 
இந்நிலையில், வாடகை கார் ஓட்டுநர் ஒருவர் 32 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மீண்டும் கால் ஓட்டுநரின் பாலியல் பலாத்கார சம்பவம் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஒரு பெண் டெல்லி துவாரகா பகுதியில் இருந்து அருகில்லுள்ள மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வாடகை காலில் இரவு 10.30 மணிக்கு ஏறியுள்ளார். அந்த பெண் ரஜவுரி கார்டனிலுள்ள ஒரு மாலில் வேலை செய்கிறார். அவரது வீடு மது விஹார் பகுதியில் உள்ளது. 

அந்த டாக்சியில் வேறு சில பயணிகளும் இருந்துள்ளனர். திடீர் என்று அந்த கார் ஓட்டுநர் டாக்சியை மெதுவாக ஓட்டிச் சென்று, டீசல் தீர்ந்துவிட்டதாகக் கூறி மற்ற பயணிகளை இறக்கிவிட்டுள்ளார். அப்போது காரில் இருந்த அந்ப் பெண் இறங்குவதற்குள் காரை ஓட்டிச்  சென்றுள்ளார்.

இதனால் அச்சமடைந்த அந்தப் பெண்ணை, அந்த கார் ஓட்டுநர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதைத் தடுக்க அந்தப் பெண் போராடியுள்ளார். அப்போது, அந்தப் பெண்ணின் செல்போனை பறித்துள்ளார். அத்துடன் அந்தப் பெண்ணின் முகத்தில் கத்தியால் குத்தி, அவரது ஆடைகளையும் கிழித்துள்ளார். பின்னர் அந்தப் பெண்ணை கதறக் கதற கொடூரமான முறையில பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அப்போது அந்த வழியாகச் சென்ற வாகனங்களில் சென்றவர்கள் அந்தப் பெண்ணின் சத்தம் கேட்டு, இது குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ரோந்து படை காவலர்கள் அந்தக் காரை மடக்கியுள்ளனர். 
 
இதைப் பார்த்த அந்த ஓட்டுநர் உடனே அந்தக் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓட முயன்றுள்ளார். இதைத் தொடர்ந்து, காவலதுறையினர் அவரை துரச்சிச் சென்று மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். இதைத் தொடர்ந்த காவல்துறையினர் அவரிமம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் ரமேஷ்குமார் என்பதும், அவருக்கு வயது 40 என்பதும் தெரிய வந்தது.
 
இதைத் தொடர்ந்து, அவரது கார் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ரமேஷ் குமாருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர் நாங்கல்லி சகரவதி பகுதியில் வசித்து வருகிறார். 9 ஆம் வகுப்பு வரை படித்த இவர், கடந்த 8  ஆண்டுகளாக  டாக்சி ஓட்டி வருகிறார். இது குறித்து தெற்கு தூவாரகா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுச் செய்யபட்டுள்ளது.
 
இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இந்தப் பெண்ணுக்கு ஒரு குழந்தை உள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்னர் இவரது கணவரைப் பிரிந்து சென்று விட்டார். இதனால் இவர் தனது குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்