மத்திய அரசின் தடையை ஏற்கிறோம்: பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கலைப்பு
புதன், 28 செப்டம்பர் 2022 (17:59 IST)
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா 5 வருடங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக இன்று மத்திய அரசு அறிவித்த நிலையில் அந்த அமைப்பு கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு தீவிரவாதிகளுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அதிரடியாக சோதனை செய்யப்பட்டது
தமிழகம் கேரளா உள்பட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதாகவும் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின
இந்த நிலையில் இன்று காலை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த அமைப்பு கலைக்கப்படுவதாக கேரள மாநில பொதுச்செயலாளர் அப்துல் சத்தார் அவர்கள் தெரிவித்துள்ளார்
நாட்டின் சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் என்ற வகையில் மத்திய அரசின் தடையை ஏற்கிறோம் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது