இதுகுறித்து அம்பானி செய்தியாளர்களிடம் கூறியபோது, ஆர்.பி.ஐ-ன் எஸ்.டி.ஆர் திட்டம் மூலம், எனது கடன்களைச் செலுத்த 7 மாதம் அவகாசம் கிடைத்துள்ளது. வருகின்ற செப்டம்பர் மாதத்துக்குள் 60 சதவிகித கடன்கள் அடைக்கப்பட்டுவிடும். ஏர்செல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலமாக, 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் கோடி வருவாய் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்துக்குக் கிடைக்கும். இதுவே 60 சதவிகித கடன்களை அடைக்க உதவியாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.
அம்பானிக்கு ரூ.3 ஆயிரம் கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் அதே நேரத்தில் ப்ளூம் பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் நிறுவனம்' வெளியிட்டுள்ள பட்டியலில், அனில் அம்பானியின் சொத்து 2.7 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதனால், பல்லாயிரம் கோடி இழப்பு ஏற்பட்டாலும், அனில் அம்பானி எப்படி முதல் இடத்தில் இருக்கின்றார் என்பது புரியாத புதிராக உள்ளது.