அடுத்த இந்திய பாஜக தலைவர் யார்? – அமித்ஷா அறிவிப்பு!

செவ்வாய், 15 அக்டோபர் 2019 (13:00 IST)
பாஜக-வின் அடுத்த அகில இந்திய தலைவர் யார் என்பது குறித்து டிசம்பரில் முடிவு செய்யப்படும் என மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

பாரதீய ஜனதா கர்சியின் தலைவர் பதவிக்கான காலம் 3 ஆண்டுகள் ஆகும். கடந்த 2016ல் அமித்ஷா இரண்டாவது முறையாக தலைவராக பதவியேற்று சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில் அவரது பதவிக்காலம் கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்தது.

ஆனால் அப்போது மக்களவை தேர்தல் நெருங்கியிருந்ததால் தலைவர் பதவிக்கான தேர்தலை தேர்தலுக்கு பிறகு வைத்துக் கொள்ளலாம் என ஒத்தி வைக்கப்பட்டது. அதனால் தொடர்ந்து பாஜக தலைவராக பதவி வகித்து வந்த அமித்ஷா மக்களவை தேர்தலுக்கு பிறகு மத்திய உள்துறை அமைச்சராக பதவியேற்று செயல்பட்டு வருகிறார்.

இதனால் ஒரே நேரத்தில் அமைச்சர் பதவியையும், கட்சி தலைவர் பதவியையும் நிர்வகிக்க வேண்டிய சூழல் அமித்ஷாவுக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே பாஜக-வின் செயல் தலைவராக ஜே.பி.நட்டா செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் பாஜகவின் அடுத்த தலைவர் குறித்த அறிவிப்பு டிசம்பரில் வெளியாகும் என அமித்ஷா தெரிவித்துள்ளார். செயல் தலைவராக இருக்கும் ஜே.பி.நட்டா தலைவராக வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்