பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார் ஜான் கெர்ரி

வெள்ளி, 1 ஆகஸ்ட் 2014 (11:11 IST)
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான்கெர்ரி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறார்.

கெர்ரி கடந்த (30. 07.2014) புதன் கிழமை 3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்தார். முன்னதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்து பேசினார்.

அப்போது வரும் செப்டம்பர் மாதம் வாஷிங்டன்னில் நடக்க உள்ள உச்சி மாநாடு குறித்து இருவரும் கலந்துரையாடினர்.

பின்னர் ஜான் கெர்ரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

“பிரதர் மோடிக்கு எங்களது வாழ்த்துக்கள். புதிய அரசின் அணுகுமுறை மற்றும் உக்தி மிகவும் சிறப்பாக உள்ளது. மோடி தலைமையிலான அரசு இரு நாடுகளுக்கும் உள்ள இடையேயான உறவை மேம்படுத்த வாய்ப்புகளை வழங்கியுள்ளது.

செப்டம்பரில் நடைபெறும் ஒபாமா-மோடி சந்திப்பை நாங்கள் ஆர்வமுடன் எதிர்நோக்கியுள்ளோம்”. என்று தெரிவித்தார்.

இதையடுத்து இன்று அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார். மோடி அரசு பதவியேற்றப் பின் அமெரிக்க அரசு சார்பில் கெர்ரி உயர்மட்ட குழுவை சந்தித்து பேசுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்