காங்கிரஸ் மீதான வழக்கை திரும்ப பெற்ற அம்பானி : பாஜக அதிர்ச்சி

செவ்வாய், 21 மே 2019 (21:39 IST)
ரபேல் வழக்கில் காங்கிரஸ் கட்சி மீதும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதும் ரிலையன்ஸ் கம்யூனிகேசன் அதிபதி அனில் அம்பானி தொடுத்திருந்தார்.இவ்வழக்கின் மீதான அனைத்து கட்ட விசாரணைகளும் முடிவடைந்துள்ளன. கடந்த டிசம்பர் மாத தீர்ப்பு மத்திய அரசுக்கு ஆதரவாக வெளியானது. மேலும் இதற்கு எதிராக தொடுத்த சீராய்வு மனுக்களுக்கு எதிராக கடந்த சில மாதஙகளாக நடைபெற்றுவந்தன.
இந்நிலையில் கடந்த இவ்வழக்கின் மீதான விசாரணை முடிவுற்றநிலையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தள்ளி வைத்துள்ளது. ஆனால் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.இதற்கு எதிராக அம்பானி ,ராகுல்காந்தி மீது  வழக்கு தொடுத்தார்.
 
இந்நிலையில் காங்கிரஸ் மீது அவமதிப்பு வழக்குத் தொடுத்து ரூ. 5000 கோடி நஷ்ட ஈடு கேட்டிருந்தார். பாஜக ஆட்சியும் இவ்வழக்கில் அனிலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது. 
இதனையடுத்து தற்போது ரபேல் வழக்கில் காங்கிரஸ் மீதும் அக்கட்சியின் தலைவர் ராகுல் மீது தொடுத்த வழக்கை அனில் அம்பானி வாபஸ் பெற்றுள்ளார். ரபேல் வழக்கில் அனிலுக்கு ஆதரவளித்த  பாஜக அவரது இந்த திடீர் முடிவால் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்