அமேசான் ஊழியர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் கூகுள் நிறுவனம் கொரோனா காலத்தில் என்னை வேலையை விட்டு தூக்கிய போது அமேசான் நிறுவனத்தில் சேர்ந்தேன். ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அந்த நிறுவனத்தில் முதுநிலை தொழில்நுட்ப திட்ட மேலாளராக பணியாற்றி வரும் நிலையில் எனக்கு ஆண்டுக்கு 3.10 கோடி ரூபாய் சம்பளம் தருகிறார்கள்.
ஆனால் இந்த சம்பளத்துக்கு ஏற்ற வேலையை நான் நாங்கள் செய்வதில்லை, குறிப்பாக கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மிகவும் குறைந்த வேலையை நான் செய்தேன். மூன்று நாட்களில் முடிக்க வேண்டிய வேலையை 90 நாட்கள் எடுத்து செய்து வருகிறேன். என்னுடைய வேலை பெரும்பாலும் மீட்டிங்கில் கழிந்து விடுகிறது. மொத்தத்தில் நான் கிட்டத்தட்ட வேலை செய்யாமல் தான் சம்பளம் தருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அவருடைய பதிவு வைரலாகி வரும் நிலையில் பலர் இந்த பதிவை ஆதரித்தும் சிலரை எதிர்த்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கார்பரேட்டை பொருத்தவரை கொடுத்த வேலையை செய்ய வேண்டும் என்பதுதான் நமது கடமை. அவருக்கு என்ன வேலை கொடுத்திருக்கிறார்களோ அதை மட்டும் அவர் செய்கிறார் என்று அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்
மேலும் சிலர் வேலை பார்க்காமல் சம்பளம் வாங்குவது என்பது உங்களுக்கு வசதியாக இருந்தாலும், நீங்கள் எதையும் கற்றுக் கொள்ளப் போவதில்லை,, இந்த செயல்பாடு நன்றாக வேலை செய்பவரையும் பாதிக்கும் என்று தெரிவித்து வருகின்றனர். மொத்தத்தில் அவருடைய பதிவு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.