டாய்லெட் கவர், டோர் மேட்டில் பிள்ளையார் படம்: சர்ச்சையில் அமேசான்

சனி, 18 மே 2019 (10:23 IST)
அமேசான் நிறுவனம் டாய்லெட் கவர், ஃபுட் மேட் ஆகியவற்றில் இந்து கடவுளில் படங்களை அச்சிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது. 
 
ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளமான அமேசான் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனமாக இருந்தாலும், இந்தியாவில் அதன் மார்கெட் சிறப்பாகவே இருக்கிறது. இந்நிலையில் அமேசான் ஒரு புது சிக்கலில் சிக்கியுள்ளது.   
 
ஆம், கழிவறைகளில் பயன்படுத்தப்படும் கவர்கள், காலணிகள், வாசலில் பயன்படுத்தப்படும் மேட் உள்ளிட்ட பொருட்களில் பிள்ளையார் படங்கள் பொறிக்கப்பட்டு அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
 
இதனால், இந்தியாவில் அமேசான் பொருட்கள் புறக்கணிக்கப்பட வேண்டும் என எதிர்ப்புகள் எழுந்துள்ளது. இந்த சர்ச்சை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 
இதற்கு சுஷ்மா ஸ்வராஜ் அமேசான் இந்த கடவுள்களை அவமதிக்கும் வகையில் அமேசான் வலைத்தளத்தில் உள்ள விற்பனை பொருட்களின் புகைப்படங்கள் நீக்கப்பவில்லை என்றால் அமேசான் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்கள் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்துள்ளார். 
 
இதற்கு முன்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு கனடா நாட்டிற்கான அமேசான் இணையதளத்தில் இந்திய கொடி பொறிக்கப்பட்ட மேட்கள் விற்பனை செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது  குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்