எப்போது வேண்டுமானாலும் பிரச்சனை ஏற்படலாம்.. அமேசான் நிறுவனர் எச்சரிக்கை

திங்கள், 21 நவம்பர் 2022 (08:00 IST)
உலகின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான அமேசான் நிறுவனத்தின் ஜெப் பிஜோஸ் அவர்கள் பணத்தை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்றும் எப்போது வேண்டுமானாலும் பிரச்சனை ஏற்படலாம் என்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டு உள்ளது என்பதும் பணவீக்கம் மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக விலைவாசி உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அமேசான் நிறுவனத்தின் ஜெப் பிஜோஸ் அவர்கள் நுகர்வோருக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இந்த எச்சரிக்கையில் நீங்கள் மிகப்பெரிய டிவி உள்பட எந்த பொருளை வாங்க வேண்டும் என்று நினைத்தாலும் அதை சற்று ஒத்தி போடுங்கள் என்று தெரிவித்துள்ளார். 
 
எப்போது வேண்டுமானாலும் பிரச்சினை ஏற்படலாம் என்றும் எனவே பணத்தை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, பணவீக்கம், ரஷ்யா-உக்ரைன் போர்  மற்றும் முன்னணி நிறுவனங்களின் பணி நீக்க நடவடிக்கை ஆகியவற்றை குறிப்பிட்டு அமேசான் நிறுவனர் ஜெப் பிஜோஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்