சமாஜ்வாடி கட்சி தலைவர் முலயாம் சிங்கின் நெருங்கிய நண்பர் அமர் சிங். இவர்கள் இருவருக்கும் இடையே திடீர் மோதல் வெடித்ததால், கடந்த 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சமாஜ்வாடி கட்சியிலிருந்து அமர் சிங் அதிரடியாக நீக்கப்பட்டார்.
இதனையடுத்து, தனிக் கட்சி தொடங்கிய அமர் சிங், கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தர பிரதேச சட்ட மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தார்.
இந்த நிலையில், முலயாம் சிங்க்கும், அமர் சிங்க்கும் இடையே மோதல் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து, சமாஜ்வாடி கட்சியில் அமர்சிங்-கை இணைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டு, ராஜ்யசபா எம்பி-க்கான பெயர் பட்டியலில் அவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.