அசையா சொத்துக்களை ஏலத்தில் விடும் ஏர் இந்தியா!

வெள்ளி, 18 ஜூன் 2021 (08:21 IST)
சமாளிக்க முடியாத தொடர் இழப்பு காரணமாக நாடு முழுவதும் உள்ள அசையா சொத்துக்களை ஏலம் விடுகிறது ஏர் இந்தியா.
 
கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை விற்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது. ஆனாலும் ஏர் இந்தியாவை வாங்க தனியார் நிறுவனங்கள் முன் வராத சூழலில் மேலும் சில சலுகைகளையும் மத்திய அரசு அறிவித்து வருகிறது.
 
முன்னதாக ஏர் இந்தியாவின் கடன் 62 கோடியில் இருந்து 23 கோடியாக குறைக்கப்பட்டது. பிறகு ஏர் இந்தியாவுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தையும் விற்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தற்போது சமாளிக்க முடியாத தொடர் இழப்பு காரணமாக நாடு முழுவதும் உள்ள அசையா சொத்துக்களை ஏலம் விடுகிறது ஏர் இந்தியா.
 
ஆம், டெல்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 10 நகரங்களில் உள்ள ஏர் இந்தியாவுக்கு சொந்தமான 14 அசைய சொத்துக்களை ஏலம் விட முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்