ஷாப்பிங் சென்ற எம்.பி.யால் 45 நிமிடம் தாமதமாக புறப்பட்ட விமானம்

செவ்வாய், 24 பிப்ரவரி 2015 (18:17 IST)
ஷாப்பிங் சென்ற காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.பி. ரேணுகா சௌத்ரி திரும்பிவர தாமதமானதால் விமானம் 45 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
 
முன்னாள் மத்திய மந்திரியும், மாநிலங்களவை உறுப்பினருமான ரேணுகா சௌத்ரி, கடந்த வெள்ளிக்கிழமை அன்று, அமெரிக்காவிலிருந்து ஹைதராபாத் வந்தடைய ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்துள்ளார்.
 
அப்போது டெல்லி வந்துள்ள ஏர் இந்தியா விமானம் மாலை 7 மணியளவில் புறப்படுவதற்கு தயாராக இருந்தது. விமானத்தில் அவரது உடமைகள் அனைத்தும் ஏற்றப்பட்டுவிட்டது. பின்னர் விமான பயணிகளுக்கான இறுதி அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் ரேணுகா சௌத்ரி இறுதி அழைப்பு வரையில் வந்தடையவில்லை.
 
விமானத்தில் இருந்த அவரது உடமைகளை உடனடியாக இறக்கிவிட முடியாது என்ற நிலையில் மொத்த விமானமும் அவருக்காக காத்திருந்துள்ளது. பிறகு அவர் ஷாப்பிங்கை முடித்துவிட்டு விமான நிலையத்துக்கு வந்துள்ளார். ஆனால், விமானம் புறப்படும் நேரம் கடந்து விட்டது.
 
இதனால் மீண்டும் விமானம் புறப்படுவதற்கான, அறிவிப்பு வரும் வரை விமானிகளும், பயணிகளும் காத்திருந்துள்ளனர். இதனால், விமானம் சுமார் 45 நிமிடம் தாமதமாக புறப்பட்டுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை ரேணுகா சௌத்ரி மறுத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்