96% கொரோனாவால் நுரையீரல் பாதிக்கப்பட்ட பெண் குணமான அதிசயம்!

வியாழன், 9 டிசம்பர் 2021 (14:10 IST)
96% கொரோனாவால் நுரையீரல் பாதிக்கப்பட்ட பெண் குணமான அதிசயம்!
கொரோனா வைரஸ் காரணமாக 96% நுரையீரல் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அதிசயமாக குணமான சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது 
 
கர்நாடக மாநிலத்தில் கொப்பால்நகர் என்ற பகுதியைச் சேர்ந்த 48 வயது பெண் கீதா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
 
அவரை மருத்துவர்கள் சோதனை செய்த நிலையில் அவரது நுரையீரல் 96% பாதிக்கப்பட்டதாகவும் அவர் உயிர் பிழைப்பது கடினம் என்றும் கூறப்பட்டது. இருப்பினும் அவருக்கு நம்பிக்கையுடன் மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில் தீவிர சிகிச்சை காரணமாக தற்போது அவர் முழுமையாக குணமடைந்துள்ளார்.
 
கொரோனாவால் பாதிக்கபப்ட்டு 158 நாட்களுக்கு பின்னர் குணமடைந்த கீதாவுக்கு அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்