உச்ச நீதிமன்ற அமர்வுகளுக்கு தலைமை நீதிபதி அறிவுரை

வெள்ளி, 18 நவம்பர் 2022 (15:38 IST)
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், தினமும் 10 வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்று   உச்ச நீதிமன்ற அமர்வுகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
 

உச்ச  நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய், சந்திர சூட்டை  நியமிக்கப்  பரிந்துரை செய்யப்பட்டதற்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு  அக்டோபர் மாதம்  ஒப்புதல் வழங்கியிருந்தார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய் சந்திரசூட் அவர்கள் நியமனம் செய்யும்படி பரிந்துரை செய்யப்பட்டதை அடுத்து,  கடந்த நவம்பர் 9 ஆம் தேதி  அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அவர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த  நிலையில்,  பதவி ஏற்றது முதல் புதிய  உத்தரவுகள் பிறப்பித்து வரும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், தினமும் 10 வழக்குகளை விசாரிக்க வேண்டும் என இன்று  உச்ச நீதிமன்ற அமர்வுகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது:

இந்தியாவில் சுமார் 30 ஆயிரம் மனுக்கள் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு அவை நிலுவையிலுள்ளது. எனவே, இந்த ஆண்டின் அனைத்து மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும்,  உயர் நீதிமன்றங்களில் இருந்து உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்படும் மனுக்கள் ஜாமீன் ககோரிக்கை என தினமும் 10 வழக்குகளை  உச்ச நீதிமன்றத்தின் அனைத்து அமர்வுகளும் விசாரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

Edited by Sinoj
 

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்