காரைக்கால் துறைமுகத்தை ஏலம் எடுக்கின்றாரா அதானி?

புதன், 3 ஆகஸ்ட் 2022 (16:44 IST)
புதுச்சேரி அரசுக்கு சொந்தமான காரைக்கால் துறைமுகத்தை இந்தியாவின் பிரபல தொழிலதிபர் அதானி ஏலம் எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
காரைக்கால் துறைமுகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திவாலானதாக அறிவிக்கப்பட்டது. இரண்டாயிரம் கோடிக்கு மேல் கடன் இருந்ததாக கூறப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டது
 
இந்த நிலையில் தற்போது காரைக்கால் துறைமுகம் ஏலம் விட இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் இந்த துறைமுகத்தை ஏலம் எடுக்க அதானி நிறுவனம் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது 
 
மேலும் அதானிக்கு போட்டியாக வேதாந்தா நிறுவனம் ஏலத்தில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை மத்திய அரசுக்கு ஆயிரம் கோடி ரூபாய் வரை வருமானம் பெற்றுக்கொடுத்த காரைக்கால் துறைமுகத்தை அதானி கைப்பற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
ஏற்கனவே இந்தியாவின் பல துறைமுகங்கள் அதானி கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் காரைக்கால் துறைமுகம் அவரது கட்டுப்பாட்டுக்கு வர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்