மும்பை மாலாட் பகுதியில் வசிக்கும் தொலைக்காட்சி மற்றும் சினிமா நடிகையின் செல்போனை ஹேக் செய்து, அவரது ஆபாசமான மற்றும் போட்டோஷாப்பால் மாற்றப்பட்ட படங்கள் டெலிகிராம் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகையின் மேனேஜர் இதுகுறித்து கூறியபோது. “New Cycle On Road 00” என்ற டெலிகிராம் குழுவில் நடிகையின் ஆபாசமாக புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. இந்த குழுவில் சேர பணம் செலுத்த வேண்டியதுடன், உறுப்பினர்களின் அடையாளங்கள் மறைக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் "Mr. Rocky RK" என்ற பெயரில் இந்த படங்களை ஒருவர் பகிர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையை உறுதி செய்ய, நடிகை ஒரு நபரை அந்தக் குழுவில் சேர செய்தபோது மேலும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 17 முதல் மே 19, 2025 வரை பல்வேறு ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அந்த குழுவில் பகிரப்பட்டுள்ளன என்று அவர் கண்டறிந்துள்ளார்.
தனக்கே தெரியாமல், தன்னுடைய செல்போனை ஹேக் செய்து அதில் உள்ள புகைப்படங்கள், வீடியோவை ஹேக் செய்து, அந்த பதிவுகள் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளதாக நடிகை சந்தேகம் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.