ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில், 1998-ஆண்டு ’ஹம் சாத் சாத் ஹெய்ன்’என்ற படத்தில் நடிக்க வந்த பிரபல நடிகர் சல்மான் கான், சட்ட விரோதமாக ஆயுதங்களை வைத்திருந்த்தாகவும், அதை பயன்படுத்தி 3 அரிய வகை மான்களை வேட்டையாடியதாகவும், அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது, இது தொடர்பாக அவர் மீது இரண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த, வழக்கு கீழ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதில், சல்மான் கானிற்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கீழ் நீதிமன்ற தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் சல்மான் கான் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த ராஜஸ்தான் உயர் நீதிமன்றம், கீழ் நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்து சல்மான் கானை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.