நடிகர் சல்மான் கான் உருவபொம்பை எரிப்பு

புதன், 27 ஜூலை 2016 (09:00 IST)
நடிகர் சல்மான் கான் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விலங்கு நல ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம்.

 
 
கடந்த 1998 ஆம் ஆண்டு ’ஹம் சாத் சாத் ஹெய்ன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக ஜோத்பூர் வந்திருந்த சல்மான் கான், அங்கு 3 மான்களை வேட்டையாடியதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.  சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும், அதை பயன்படுத்தி மான்களை வேட்டையாடியதாகவும் சல்மான்கான் மீது ஜோத்பூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜஸ்தான் உயர்நீதி மன்றத்தில் சல்மான் கான் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சல்மான் கானுக்கு கீழ் கோர்ட் விதித்திருந்த சிறை தண்டனையை ரத்து செய்து வழக்குகளில் இருந்து விடுதலை செய்ய உத்தரவிட்டார்.  இந்நிலையில், மான் வேட்டை வழக்கில் சல்மான் கான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து ஜோத்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சல்மான் கானின் உருவபொம்பை எரித்து ஜோத்பூரில் விலங்கு நல ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மேலும், சல்மான் கானுக்கு உரிய தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.  இந்த விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை மனு ஒன்றினையும் அனுப்பியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்