நடிகர் அஜித் பெயரில் சிவலிங்கத்தை நிறுவிய ரசிகர்கள்

செவ்வாய், 23 ஆகஸ்ட் 2016 (13:13 IST)
கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில்,  கோடி லிங்கேஸ்வரர் என்று ஒரு கோவில் உள்ளது.


 


இது மிகவும் பிரசித்தி பெற்ற கோயில். இக்கோவிலில் ஒரு கோடி சிவ லிங்கங்கள் நிறுவ இலக்கு வைத்துள்ளனர். இதுவரை 92 லட்சம் சிவ லிங்கங்கள், இக்கோவிலில் நிறுவப்பட்டுள்ளது.

தற்போது, பெங்களூரில் உள்ள நடிகர் அஜித்குமார் ரசிகர்மன்றங்களின் சார்பில், அஜித்தின் பெயரில் அவரது ரசிகர்கள், சிவ லிங்கங்களை  நிறுவியுள்ளனர். இதற்கு முன்பு, தமிழக முதல்வர் ஜெயலலிதா, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹசன் ஆகியோர் பெயரில் இங்கு சிவலிங்கங்கள் நிறுவப்பட்டதாக கூறுகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்