டெல்லியில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மீது துப்பாக்கிச்சூடு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதால் பரபரப்பு

புதன், 12 பிப்ரவரி 2020 (06:49 IST)
டெல்லியில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மீது துப்பாக்கிச்சூடு
டெல்லியில் ஆம் ஆத்மி எம்எல்ஏ நரேஷ் யாதவ் என்பவர் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இருப்பினும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த தொண்டர் ஒருவர் பரிதாபமாக பலியானார் 
 
டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மெஹ்ராலி என்ற தொகுதியில் போட்டியிட்ட நரேஷ் யாதவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து நரேஷ் யாதவ் தனது ஆதரவாளர்களுடன் தனது வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்தார் 
 
இந்த நிலையில் திடீரென இந்த கொண்டாட்டத்தின் போது துப்பாக்கியால் மர்ம நபர் ஒருவர் நரேஷ் யாதவ்வை நோக்கி சுட்டார். ஆனால் அந்த குண்டு குறி தவறி ஆம் ஆத்மி தொண்டர் ஒருவர் மீது பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது துப்பாக்கி குண்டால் பாதிக்கப்பட்ட அந்த தொண்டர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது 
 
ஆம் ஆத்மி எம்எல்ஏ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் அவரை கொலை செய்ய குறி வைத்ததும், அந்த குறி தவறி தொண்டர் ஒருவர் பலியாகியுள்ளதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஆம் ஆத்மி கட்சியினர்கள் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கியால் சுட்டு மர்ம நபரை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்