ஆதார் அட்டையை புதுப்பிப்பது கட்டாயம்! – மத்திய அரசு உத்தரவு!

வெள்ளி, 11 நவம்பர் 2022 (09:46 IST)
இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதை புதுப்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்திய குடிமக்கள் அனைவரும் ஆதார் அடையாள அட்டை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்ட நிலையில் பல வகை பயன்பாடுகளுக்கும் ஆதார் எண் இணைத்தல் அவசியமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பலரும் ஆதார் அட்டைகளை பெற்று பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது ஆதார் அட்டை பெற்று 10 ஆண்டுகளுக்கும் மேலாகியிருந்தால் அந்த அட்டைதாரர்கள் ஆதாரை புதுப்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆதார் அட்டை மூலமாக நடைபெறும் மோசடிகளை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை பெற்று 10 ஆண்டுகளும் மேல் ஆகியிருந்தால் அவர்கள் https://uidai.gov.in/ta/ என்ற இணையதளத்தில் அல்லது அருகே உள்ள ஆதார் சேவை மையத்தில் சென்று புதுபித்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Edited By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்