இவங்க தொல்ல தாங்க முடியல: மாணவர்கள் பள்ளியில் மத்திய உணவு சாப்பிட ஆதார் கட்டாயம்!!
சனி, 4 மார்ச் 2017 (15:28 IST)
இந்தியா முழுவதும் பள்ளிகளில் மாணவர்கள் மதிய உணவு சாப்பிட தங்களுடைய ஆதார் எண்களை கொடுக்க வேண்டும், என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படுகிறது. இந்நிலையில், மதிய உணவு சாப்பிடும் மாணவர்கள் தங்களது ஆதார் எண்களை பள்ளிகளில் பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதே போல் சமையலர்கள், உதவியாளர்களும் ஆதார் எண்களை பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஆதார் அட்டை இல்லாதவர்கள் புதிதாக விண்ணப்பித்து ஆதார் அட்டை பெற்றுக் கொண்டு, ஜூன் மாதம் 30-ந் தேதிக்குள் ஆதார் எண்ணை பள்ளிகளில் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.