மலேசியாவை சேர்ந்த பெண் ஒருவர் இந்தியாவின் அருமை பெருமைகளை பற்றி கேள்விபட்டு சுற்றி பார்ப்பதற்காக மும்பையில் வந்து இறங்கியுள்ளார். பருவ மழைக்காலம் என்பதால் மழை கொட்டி தீர்த்திருக்கிறது. சுரங்க பாதை வழியாக வந்து கொண்டிருந்த அந்த பெண் சுரங்க பாதை மழையால் நிரம்புவதை பார்த்து சுதாரித்து வெளியே வந்துள்ளார். சற்றுநேரத்தில் சுரங்க பாதையை அடைத்த வெள்ளம் சாலையில் ஆறுபோல ஓடிக்கொண்டிருந்திருக்கிறது.
அதில் காலை வைத்தால் தண்னீர் இழுத்து சென்றுவிடும் என்று உணர்ந்த அந்த பெண் மேலே சாலையை நோக்கி உதவி வேண்டி கத்தியிருக்கிறார். அவரது சத்தத்தை கேட்டு கீழே பார்த்த சிலர் உடனடியாக இறங்கி அவரை மேலே தூக்கிவிட, மேலே நின்ற சிலர் அவரை மேலே இழுக்க அந்தரத்தில் தொங்கியபடி ஒருவழியாக மேலே சென்று சேர்ந்தார் அந்த பெண்.